டெல்லி, ஜன. 7–
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 214 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்ட கொரோனா பாதிப்பு விவரங்களை இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 4.46 கோடியாக உயர்ந்துள்ளது.
சிகிச்சையில் 2509 பேர்
கொரோனா தொற்றுக்கு கேரளத்தில் 2 பேர், மகாராஷ்டிரம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் ஒன்று என கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் பலியானதை தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 5,30,718 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,509 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது நாட்டில் குணமடைந்தவர்களின் விகிதம் 98.80 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,87,983 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், இதுவரை 220.13 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.