செய்திகள்

இந்தியாவில் 24 மணி நேரத்தில் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லி, ஜன. 31–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 109 ஆக பதிவாகியுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1755 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,740 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,50,289 ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220 கோடியே 48 லட்சத்து 69,795 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 2,82,654 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *