செய்திகள்

இந்தியாவில் 201 நாட்களில் இல்லாத அளவாக குறைந்த கொரோனா பாதிப்பு

புதிதாக 18,346 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி, அக்.5–

இந்தியாவில் புதிதாக 18 ஆயிரத்து 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 201 நாட்களில் இல்லாத அளவாக ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவாக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 18 ஆயிரத்து 346 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 53 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 29 ஆயிரத்து 639 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 50 ஆயிரத்து 886 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 902 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 263 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 49 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 61 லட்சத்து 65 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 81 லட்சத்து 14 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 32 லட்சத்து 27 ஆயிரத்து 815 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் இதுவரை 48 லட்சத்து 22 ஆயிரத்து 761 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *