செய்திகள்

இந்தியாவில் 2.50 லட்சத்தை கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப்.18–

இந்தியாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 77 ஆயிரத்து 150ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 419 பேர், டெல்லியில் 167 பேர், சத்தீஸ்கரில் 158, உத்தரப்பிரதேசத்தில் 120, குஜராத்தில் 97 பேர், கர்னாடகாவில் 80, மத்தியப்பிரதேசத்தில் 66 பேர், பஞ்சாபில் 62 பேர், தமிழகத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 38 ஆயிரத்து 423 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 28 லட்சத்து 9 ஆயிரத்து 643 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 18 லட்சத்து ஆயிரத்து 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 26 கோடியே 65 லட்சத்து 38 ஆயிரத்து 416 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 15 லட்சத்து 66 ஆயிரத்து 394 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *