செய்திகள்

இந்தியாவில் 2 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்த ஒரு நாள் கொரோனா பாதிப்பு

டெல்லி, ஏப். 19–

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இதுவரை மொத்தமாக பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 4-வது நாளாக கொரோனா வைரஸ் பாதிப்பு 2-லட்சத்தை தாண்டியுள்ளது.

1,619 பேர் பலி

இந்தியாவில் கொரனோ வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 29 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மொத்தம் 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 78 ஆயிரத்து 769 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 178 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 821 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *