செய்திகள்

இந்தியாவில் 2வது நாளாக 3.50 லட்சத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, மே 12–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 4 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு 3வது நாளாக இன்று சற்று குறைந்துள்ளது. அதன்படி, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 48 ஆயிரத்து 421 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 33 லட்சத்து 40 ஆயிரத்து 938ஆக உள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,205 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 54 ஆயிரத்து 197ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 55 ஆயிரத்து 338 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 93 லட்சத்து 82 ஆயிரத்து 642ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 17 கோடியே 52 லட்சத்து 35 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

16 கோடி பேர்…

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 கோடியை தாண்டி உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 13 கோடியே 90 லட்சத்து 28 ஆயிரத்து 61 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 33 லட்சத்து 30 ஆயிரத்து 828 பேர் உயிரிழந்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *