செய்திகள்

இந்தியாவில் 16 ஆயிரத்தை நெருங்கிய ஒரு நாள் கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஜூன் 25–

இந்தியாவில் இன்று 15 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 17 ஆயிரத்து 336-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 78 ஆயிரத்து 234 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12 ஆயிரத்து 425 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 61 ஆயிரத்து 481 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 91 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது.

உலக பாதிப்பு

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 81 லட்சத்து 51 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 86 லட்சத்து 88 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52 கோடியே 31 லட்சத்து 13 ஆயிரத்து 719 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 49 ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.