புதுடெல்லி, ஜூன் 16–
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,213 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
நேற்று முன் தினம் 6,594ம், நேற்று 8,822 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 12 ஆயிரத்து 213 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 4 கோடியே 32 லட்சத்து 57 ஆயிரத்து 730 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 7,624 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 712 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 11 பேர் பலியாகினர். இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 803 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 195 கோடியே 67 லட்சத்து 37 ஆயிரத்து 14 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 15 லட்சத்து 21 ஆயிரத்து 942 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 23 லட்சத்து 94 ஆயிரத்து 455 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 73 லட்சத்து 96 ஆயிரத்து 640 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 86 லட்சத்து 61 ஆயிரத்து 417 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63 லட்சத்து 36 ஆயிரத்து 398 பேர் உயிரிழந்துள்ளனர்.