செய்திகள்

இந்தியாவில் வறுமையில் 10 கோடி பெண்கள்: ஐ.நா. அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி, செப். 15

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி சுமார் 8 கோடியே 70 லட்சம் பெண்களும், சிறுமிகளும் வறுமையில் சிக்கி இருக்கிறார்கள். இப்போது கதிகலக்கி வரும் ‘உயிர்க்கொல்லி’ கொரோனா எதிரொலியாக எண்ணிக்கை 10 கோடியாக உயரும் ஆபத்து இருக்கிறது. இந்த அதிர்ச்சித் தகவலை ஐ.நா. மகளிர் மற்றும் ஐ.நா. மேம்பாட்டுத் திட்ட அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

129 நாடுகளில் இது சம்பந்தமாக ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நாடுகளில் 4 கோடியே 70 லட்சம் பேர் கொரோனா காரணமாக வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா பாதிப்பு வருவதற்கு முன்னால் 13.3% பெண்கள் வறுமையில் இருந்தார்கள். அப்போது ஆண்களின் சதவீதம் 2. அடுத்த ஆண்டில் பெண்களின் சதவீதம் 14.7 ஆகவும், ஆண்களின் சதவீதம் 13.7 ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 39 கோடியே 85 லட்சம் பெண்கள் மோசமான வறுமையில் இருந்தார்கள். இது நடப்பு ஆண்டில் 40 கோடியே 90 லட்சமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு இதுவே 43 கோடியே 60 லட்சமாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மிகவும் மோசமான வறுமை நிலை என்றால் என்ன? ஒரு நாளைக்கு 1.90 டாலருக்குக் கீழாக (ரூ.140) வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழாக இருப்பதாக ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

20 வயதிலிருந்து 34 வயது வரையிலானவர்கள் மத்தியிலேயே வறுமை நிலவரத்துக்கான இந்த ஆய்வு மேற்கொள்ளபபட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *