புதுடெல்லி,ஏப்.6–
இந்தியாவில் புதிதாக 1 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக (நேற்று 795, நேற்று முன்தினம் 913) தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கு கீழ் பதிவான நிலையில் தற்போது பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 30 ஆயிரத்து 925 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 198 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 4 கோடியே 24 லட்சத்து 97 ஆயிரத்து 567 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 871 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 487 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 185 கோடியே 4 லட்சத்து 11 ஆயிரத்து 569 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 37 லட்சத்து 65 ஆயிரத்து 178 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 42 கோடியே 93 லட்சத்து 65 ஆயிரத்து 389 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 82 ஆயிரத்து 904 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்து 480 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 466 பேர் உயிரிழந்துள்ளனர்.