செய்திகள்

இந்தியாவில் புதிதாக 9,923 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஜூன் 21–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,923 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9 ஆயிரத்து 923 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,19,396 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,24,890 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,293 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,27,15,193 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 79,313 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,96,32,43,003 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,47,99,140ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 52,00,68,585 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,83,88,823 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா பாதிப்பால் இதுவரை உலகம் முழுவதும் 63,41,732 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.