டெல்லி, ஜூன் 25–
இந்தியாவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1670 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,93,952 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,670 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,31,903 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 4,44,60,379 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.