செய்திகள்

இந்தியாவில் புதிதாக 26,964 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

புதுடெல்லி,செப். 22–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் ஒரே நாளில் 26,964 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று முன் தினம் 34,403 பேருக்கும், நேற்று 26,115 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவான பதிவான நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3 கோடியே 35 லட்சத்து 31 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் 34,167 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 27 லட்சத்து 83 ஆயிரத்து 741 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3 லட்சத்து 1,989 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் கொரோனாவுக்கு 383 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து 768 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 97.77% உயிரிழப்பு விகிதம் 1.33% ஆக உள்ளது.

இந்தியாவில் இன்று (22–ந்தேதி) காலை 8 மணி நிலவரப்படி 82 கோடியே 65 லட்சத்து 15 ஆயிரத்து 754 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 75 லட்சத்து 57 ஆயிரத்து 529 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலக அளவில்…

உலகளவில் 23.02 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 47.21 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 20.69 கோடி பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் புதிதாக 1 லடசத்து 17 ஆயிரத்து 118 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. ஒரே நாளில் 1,861 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 4.32 கோடி பேருக்கு கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். 6 லட்சத்து 96 ஆயிரத்து 819 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *