செய்திகள்

இந்தியாவில் புதிதாக 237 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் பலி

டெல்லி, ஜூன் 3–

இந்தியாவில் புதிதாக 237 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 237 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 5 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 4,49,91,390 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3502 ஆக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 பேர் பலி

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு கேரளாவில் 2 பேர், டெல்லி மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் என 4 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,31,878 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரை மொத்தம் 4,44,56,000 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும் இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *