செய்திகள்

இந்தியாவில் புதிதாக 2,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி,மே 20–

இந்தியாவில் இன்று 2,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்தியாவில் நேற்று முன் தினம் 1,829 பேருக்கு நேற்று 2,829 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இன்று 2,259 ஆக குறைந்துள்ளது.

ஒரே நாளில் 2,614 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 92 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 5 லட்சத்து 24 ஆயிரத்து 323 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 15,044 ஆனது. நேற்று ஒரே நாளில் 15 லட்சத்து 12 ஆயிரதபுது 766 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 191 கோடியே 96 லட்சத்து 32 ஆயிரத்து 518 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 கோடியே 55 லட்சத்து 31 ஆயிரத்து 201 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 49 கோடியே 52 லட்சத்து 66 ஆயிரத்து 400 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் இதுவரை 62 லட்சத்து 96 ஆயிரத்து 913 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் 86,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 200 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.