செய்திகள்

இந்தியாவில் புதிதாக 2.68 லட்சம் பேருக்கு கொரோனா

புதுடெல்லி, ஜன.15

இந்தியாவில் இன்று ஒரேநாளில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 68 லட்சத்து 50 ஆயிரத்து 962 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 49 லட்சத்து 47 ஆயிரத்து 390 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 லட்சத்து 17 ஆயிரத்து 820 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 402 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 85 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 156 கோடியே 2 லட்சத்து 51 ஆயிரத்து 117 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.

உலகம்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியே 38 லட்சத்து 63 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 30 லட்சத்து 77 ஆயிரத்து 577 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26 கோடியே 52 லட்சத்து 39 ஆயிரத்து 361 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 55 லட்சத்து 46 ஆயிரத்து 541 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *