செய்திகள்

இந்தியாவில் புதிதாக 19, 893 பேருக்கு கொரோனா

புதுடெல்லி,ஆக. 4–

இந்தியாவில் புதிதாக 19,893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து 419 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 24 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 36 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 205 கோடியே 22 லட்சத்து 51 ஆயிரத்து 408 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 லட்சத்து 20 ஆயிரத்து 676 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 49 லட்சத்து 02 ஆயிரத்து 34 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 55 கோடியே 54 லட்சத்து 61 ஆயிரத்து 890 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 25 ஆயிரத்து 890 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.