செய்திகள்

இந்தியாவில் புதிதாக 1,247 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

புதுடெல்லி, ஏப்.19–

இந்தியாவில் புதிதாக 1,247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 247 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 183ஐ விட குறைவாகும்.

நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 45 ஆயிரத்து 527 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 928 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 11 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆயிரத்து 860 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஒரு நபர் உயிரிழந்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 186 கோடியே 72 லட்சத்து 15 ஆயிரத்து 865 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக அளவில்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 50 லட்சத்து 39 ஆயிரத்து 524 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 45 கோடியே 64 லட்சத்து 56 ஆயிரத்து 90 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 24 ஆயிரத்து 446 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.