செய்திகள்

இந்தியாவில் புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 30 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு

புதுடெல்லி, ஜன. 7–

இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் நுழைந்தபின்னர், கொரோனா பரவல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் நேற்று அதிரடியாக 90 ஆயிரத்து 928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

இந்நிலையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1 லட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 36,265 பேருக்கு பாதிப்பு.

நாட்டில் இதுவரை 3 கோடியே 52 லட்சத்து 26 ஆயிரத்து 386 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 302 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 83 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 30 ஆயிரத்து 836 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 43 லட்சத்து 71 ஆயிரத்து 845 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு 3 லட்சத்து 71 ஆயிரத்து 363 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 149 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 94 லட்சத்து 47 ஆயிரத்து 56 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 15 லட்சத்து 13 ஆயிரத்து 377 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 68 கோடியே 68 லட்சத்து 19 ஆயிரத்து 128 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 கோடியை தாண்டியுள்ளது. தற்போது 30 கோடியே 6 லட்சத்து 8,813 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரத்து 429 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 89 ஆயிரத்து 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 3 கோடியே 76 லட்சத்து 44 ஆயிரத்து 96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 92 ஆயிரத்து 859 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *