செய்திகள்

இந்தியாவில் புதிதாக ஆயிரத்து 778 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி, மார்ச் 23–

இந்தியாவில் புதிதாக 1 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 581ஐ விட சற்று அதிகமாகும்.

நாட்டில் இதுவரை 4 கோடியே 30 லட்சத்து 12 ஆயிரத்து 749 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 2 ஆயிரத்து 542 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 73 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 ஆயிரத்து 87 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 605 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 181 கோடியே 89 லட்சத்து 15 ஆயிரத்து 234 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 கோடியே 40 லட்சத்து 76 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 79 லட்சத்து 5 ஆயிரத்து 468 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 41 கோடியே 49 ஆயிரத்து 327 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 61 லட்சத்து 21 ஆயிரத்து 814 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.