செய்திகள்

இந்தியாவில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு

புதுடெல்லி, ஏப்.5-

இந்தியாவில் இதுவரை 7.59 கோடி கொரோனா ‘டோஸ்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி நாளுக்கு நாள் வேகம் பிடிக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி 7 கோடியே 59 லட்சத்து 79 ஆயிரத்து 651 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 43 சதவீத தடுப்பூசிகள் மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே போடப்பட்டுள்ளன.

மாநிலங்கள் வாரியாக…….

மகாராஷ்டிராவில் இதுவரை 73 லட்சத்து 54 ஆயிரத்து 244 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இது மொத்த தடுப்பூசிகளில் 9.68 சதவீதம் ஆகும்.

அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 69 லட்சத்து 23 ஆயிரத்து 8 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தில் 66 லட்சத்து 43 ஆயிரத்து 96 தடுப்பூசிகளும், ராஜஸ்தானில் 64 லட்சத்து 31 ஆயிரத்து 601 தடுப்பூசிகளும், மேற்கு வங்காளத்தில் 59 லட்சத்து 58 ஆயிரத்து 488 தடுப்பூசிகளும் போடப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில்……

தமிழகத்தில் இதுவரை 32 லட்சத்து 56 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அதில் இதுவரை 6 லட்சத்து 64 ஆயிரத்து 741 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 6 லட்சத்து 36 ஆயிரத்து 356 முன்களப் பணியாளர்களுக்கும், 45 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்ட 8 லட்சத்து 99 ஆயிரத்து 850 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சத்து 55 அயிரத்து 353 பேருக்கும் என மொத்தம் 32 லட்சத்து 56 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *