செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கு வந்தது

புதுடெல்லி, அக்.4–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்று 22 ஆயிரத்து 842 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த எண்ணிக்கை, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரத்து 702 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றில் இருந்து மேலும் 26,718 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 64 ஆயிரத்து 458 ஆக உள்ளது.

தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 247 ஆக உள்ளது. தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 48 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 90 கோடியே 79 லட்சத்து 32 ஆயிரத்து 861 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 23,46,176 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 57 லட்சத்து 18 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 83 லட்சத்து 21 ஆயிரத்து 109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிப்பில் இருந்து இதுவரை 21 கோடியே 25 லட்சத்து 81 ஆயிரத்து 692 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் இதுவரை 48 லட்சத்து 15 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *