செய்திகள்

இந்தியாவில் கொரோனா திடீர் உயர்வு: 618 பேருக்கு பாதிப்பு

டெல்லி, மார்ச் 15–

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 4197 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 402 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 618 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 4197 ஆக உள்ளது. நேற்று 5 பேர் புதிதாக உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தமாக 5,30,789 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,46,91,956 ஆக உள்ளது. தேசிய அளவில் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை 98.80 சதவிகிதமாக உள்ளது. இறப்பு சதவிகிதம் 1.19 சதவிகிதமாக இருக்கிறது. நேற்று 8,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இதுவரை 220 கோடியே 64 லட்சத்து 71,236 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *