24 மணி நேரத்தில் 7 பேர் பலி
டெல்லி, மார்ச் 29–
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2151 ஆக பதிவாகியுள்ளது என இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை, மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 4 வாரத்துக்கு மேலாக கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 200 ஆக இருந்த நிலையில், நேற்று முன்தினம் 1569 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று திடீரென கொரோனாவில் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்து, 2151 ஆக பதிவாகி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11903 ஆக பதிவாகியுள்ளது.
7 பேர் கொரோனாவுக்கு பலி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதில் கேரளா மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் தலா 3 பேர், கர்நாடகாவில் ஒருவர் என மொத்தம் 7 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,848 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 44,1,66,925 ஆக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,20,65,76,697 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,336 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.