செய்திகள்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு

டெல்லி, மே 21–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நாள்தோறும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்திருப்பது சற்றே நிம்மதி அளிப்பதாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2 லட்சத்து 59 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் முன்பைவிட சற்று குறைந்துள்ளதற்கு காரணம், வட மாநிலங்களில் தொற்றுப்பரவல் உச்சத்தை எட்டி, தற்போது குறையத் தொடங்கியுள்ளதுதான் காரணம். இந்நிலையில் நேற்று மட்டும் 4,209 பேர் இறந்துள்ளனர்.

குணமடைந்தோர் அதிகம்

தொற்று பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை குறையாமல் உள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 91 ஆயிரத்து 331 ஆக உயர்ந்துள்ளது . தொற்றில் இருந்து ஒரே நாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 295 பேர் குணமடைந்துள்ளனர் . இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 27 லட்சத்து 12 ஆயிரத்த் 735 ஆக அதிகரித்துள்ளது .

நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்ட 30 லட்சத்து 27 ஆயிரத்து 925 பேர் இந்தியாவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் இதுவரை 19 கோடியே 18 லட்சத்து 79 ஆயிரத்து 503 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *