செய்திகள்

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3.34 லட்சம்

கொரோனா பாதிப்பு 5.66 லட்சமாக ஆக உயர்வு

இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3.34 லட்சம்

 

புதுடெல்லி, ஜூன் 30–

இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 66 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 34 ஆயிரத்து 821 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 418 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 893 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று அதிகபட்சமாக 181 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 62 பேர், டெல்லியில் 57 பேர், குஜராத், கர்நாடகாவில் தலா 19 பேர் பலியானார்கள். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 88,960 ஆக உயர்ந்துள்ளது.

2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 224 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 47,744 ஆகவும் அதிகரித்துள்ளது. டெல்லியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,161 பேராக அதிகரித்துள்ளது. 56,235 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 31,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,240 பேர் குணமடைந்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் 22,147 பேரும், மேற்கு வங்கத்தில் 17,907 பேரும், ராஜஸ்தானில் 17,660 பேரும், தெலுங்கானாவில் 15,394 பேரும், கர்நாடகாவில் 14,295 பேரும், அரியானாவில் 14,210 பேரும், ஆந்திராவில் 13,891 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 13,186 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *