செய்திகள்

இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 1¾ லட்சம் பேருக்கு கொரோனா

புதுடெல்லி, மார்ச் 27–

இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25–ந்தேதி அன்று கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்த 53,476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று (26–ந்தேதி) 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 3 நாட்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 62 ஆயிரத்து 258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடிய 19 லட்சத்து 8 ஆயிரதபுது 910 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 61 ஆயிரத்து 240 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 30 ஆயிரத்து 386 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 12 லட்சத்து 95 ஆயிரத்து 23 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4 லட்சத்து 52 ஆயிரத்து 647 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 5 கோடியே 81 லட்சத்து 9 ஆயிரத்து 773 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *