செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா உறுதி

புதுடெல்லி, ஆக. 23-

இந்தியாவில் புதிதாக 25,072 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா 2வது அலை பாதிப்புகள் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.  இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 25 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்புக்குள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 49 ஆயிரத்து 306 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 389 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இது நேற்று 403 ஆக இருந்தது.  இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,34,756 ஆக உயர்ந்து உள்ளது.  
இதேபோன்று 44 ஆயிரத்து 157 பேர் குணமடைந்துள்ளனர்.  இந்நிலையில் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 16 லடசத்து 80 ஆயிரத்து 626 ஆக உயர்வடைந்துள்ளது.  நாடு முழுவதும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 924 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *