செய்திகள்

இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு நாளை முதல் விமான சேவை

அபுதாபி, ஆக.4-

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு கடந்த ஏப்ரல் 24ந்தேதி முதல் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதேபோல் கடந்த மே 12ந்தேதியில் இருந்து பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் இருந்தும் அமீரகத்துக்கு வரும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கும் என அமீரகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் 2 தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான ஆவணங்களை கட்டாயம் கையில் எடுத்து வர வேண்டும். அதேபோல் விமானம் புறப்படும் நேரத்துக்கு 48 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளையும் ஆவணமாக எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், அமீரகத்தில் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த நோயாளிகள், அமீரகத்தில் உள்ளூர் மற்றும் மத்திய அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோர் அமீரகத்துக்கு வருகை புரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு பின்னர் இந்தியா–அமீரகம் இடையே விமான சேவை நாளை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *