செய்திகள்

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 8,582 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஜூன் 12–

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 8,582 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 7,584 நேற்று 8,329 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 8,582 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,32,13,435 லிருந்து 4,32,22,017 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 4,435 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,48,308 லிருந்து 4,26,52,753 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 40,370 லிருந்து 44,513 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5,24,761 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 13,04,427 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 195.07 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 கோடியே 1 லட்சத்து 36 ஆயிரத்து 712 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 10 லட்சத்து 83 ஆயிரத்து 596 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 27 லட்சத்து 22 ஆயிரத்து 331 பேர் குணமடைந்துள்ளனர். எனினும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 30 ஆயிரத்து 785 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.