செய்திகள்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மும்பை, ஜூலை 9–

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி வித்யபீத் பல்கலைக்கழகத்தில் நிதின் கட்கரிக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது:–

பெட்ரோல் பயன்பாடு இருக்காது

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது. மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதனை வாகனங்களுக்கு பயன்படுத்தலாம். க்ரீன் ஹைட்ரஜனை ஆழ்துளை கிணற்றில் இருந்து தயாரிக்கலாம். இதனை ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கலாம்.

மேலும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகளும் அதிகரித்து உள்ளது என்று தெரிவித்தவர், “விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமல்லாமல் மின்சாரம் வழங்குபவர்களாகவும் இருக்க வேண்டும். கோதுமை, நெல், மக்காச்சோளம் பயிரிடுவதால் மட்டும் எந்த விவசாயியும் தனது எதிர்காலத்தை மாற்ற முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.