செய்திகள்

இந்தியாவில்வேகமாகக் குறையும் கொரோனா: ஒரு நாளில் 347 பேருக்கு பாதிப்பு

டெல்லி, நவ. 25–

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 347 ஆகக் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்பு விவரங்களை இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, நேற்று முன்தின பாதிப்பு 408 ஆக இருந்த நிலையில், நேற்றைய பாதிப்பு 347 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4,46,70,830 ஆக உள்ளது.

நேற்று 3 பேர் பலி

மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதை அடுத்து இறப்பு எண்ணிக்கை 5,30,604 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5,516 ஆகக் குறைந்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 78,454 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *