செய்திகள்

இந்தியாவிற்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து பேட்டிங் தேர்வு

தரம்சாலா, மார்ச் 7–

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இன்று 5வது போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா அணி முதலில் பந்துவீசி வருகிறது.

இந்நிலையில் ரஜத் படிதார் அணியிலிருந்து காயம் காரணமாகவே நீக்கப்பட்டதாக பி.சி.சி.ஐ. விளக்கம் அளித்துள்ளது. அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.

இந்திய அணி வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், படிக்கல், சர்பராஸ் கான், துருவ் ஜூரெல், ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ்.

இங்கிலாந்து அணி வீரர்கள் : ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *