செய்திகள்

இந்தியாவின் வடக்கு எல்லையில் சீன படைகள் குவிப்பு: அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், ஜூன் 2–

சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,-

சீனா தனது படைகளை இந்தியாவின் வடக்கு எல்லை பகுதி அருகே குவித்துள்ளது.சமீபத்திய சீன நடவடிக்கைகள் இந்திய எல்லையிலோ, அல்லது ஹாங்காங் அல்லது தென்சீனக் கடலிலோ இருக்கலாம். இது கடந்த 6 மாதங்களில் மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாக சீனர்கள் தங்கள் ராணுவ திறன்களை வளர்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டு கொண்டிருக்கிறோம்.

சீனா உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான உலகளாவிய பதிலை மறைத்து தாமதப்படுத்துகிறது. இது ஹாங்காங் மக்களின் அற்புதமான சுதந்திரங்களை அழிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சீனா ஆட்சியின் முகங்கள் இரண்டாக உள்ளது. இயல்பு மற்றும் செயல்பாடு, அறிவுசார் சொத்துக்களை திருடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

சீனாவின் சர்வாதிகார ஆட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகள், அவை சீனாவில் உள்ள சீன மக்கள் மற்றும் ஹாங்காங்கில் உள்ள மக்கள் மீது மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மக்கள் மீது உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *