செய்திகள்

இந்தியாவின் பொருளாதாரம் 2031 வரை சராசரியாக 6.7 சதவீத வளர்ச்சி அடையும்

கிரிசில் பொருளாதார அமைப்பு தகவல்

டெல்லி, பிப். 04–

இந்தியாவின் பொருளாதாரம் 2031 வரை சராசரியாக 6.7 சதவீத வளர்ச்சி அடையும் என்று உலக பொருளாதார நிலையை கணிக்கும் கிரிசில் (CRISIL) அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா இப்போது உலகின் 5-வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. 2027-ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும், 2031-ல் இந்தியாவின் பொருளாதாரம் 7 டிரில்லியன் டாலராக வளரும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2024 முதல் 2031 வரை, ஆண்டுக்கு சராசரியாக 6.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணப்படும் என கிரீஸில் என்ற உலக பொருளாதார கணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கவனமாக கையாள வேண்டும்

அரசாங்கத்தின் மூலதன முதலீடு ஒரு முக்கிய காரணியாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் காரணமாக உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் இந்த சரிவில் இருந்து இந்தியா விரைவில் மீண்டது.

ரஷ்யா-உக்ரைன் போர், விநியோகச் சங்கிலி நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளால் சர்வதேச பொருளாதார மந்தநிலை காணப்பட்டது. இருப்பினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை இந்தியா கவனமாக கையாள வேண்டும் என்றும் கிரிசில் என்ற பொருளாதார கணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *