செய்திகள்

இந்தியாவின் பொதுச் சொத்துக்களை தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கும் மோடி: ராகுல் தாக்கு

டெல்லி, செப். 3–

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு, நாட்டின் அனைத்து பொது சொத்துக்களையும் தனது நண்பர்களுக்கு விற்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாங்கள் நாட்டின் பொது சொத்துக்களை விற்கவில்லை; குத்தகைக்குத்தான் விடுகிறோம் என அலட்சியமாகக் கூறுகிறார். இந்நிலையில், நாட்டில் 70 ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் பொதுச் சொத்துக்களை, தனது நண்பர்களுக்கு பிரதமர் மோடி வழங்கி விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

பொருளாதாரம் மோசம்

கேரள மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, “மோடி அரசு பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாண்டு வருகிறது. இதனால் நாடு சிக்கலான காலகட்டத்தில் உள்ளது. 70 ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்ட சொத்துக்களை, பிரதமர் மோடி சில குறிப்பிட்ட நண்பர்களுக்குத் தாரை வார்த்துள்ளார்.

மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள், அமைப்புச்சார தொழிலாளர்களின் பணமதிப்பு குறைந்துள்ளது. ஆனால் பிரதமர் மோடியின் நான்கு நண்பர்களின் சொத்து மதிப்பு மட்டும் அதிகரித்துள்ளது என விமர்சனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *