ஆர் முத்துக்குமார்
அமெரிக்க அதிபர் தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்துவிட்டது. பல நிபுணர்களும் இந்த தேர்தல் உலகின் பல்வேறு பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றனர்.
இந்த தேர்தலில், அமெரிக்க அதிபராக ஏற்கனவே ஒருமுறை வெற்றி பெற்று மற்றொரு முறை தோல்வியை தழுவிய டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.
மற்றொரு புறம், தொடக்கத்தில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஜோ பைடனே களம் காணவிருந்தார். ஆனால் பலரும் அவருடைய ஆரோக்கியம் குறித்து கேள்வி எழுப்பியதால் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கினார். அவருடைய ஆட்சியில் துணை அதிபராக பதவி வகித்து வரும், கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக களத்தில் டிரம்பின் சவாலை எதிர்கொண்டார்.
வாக்கு எண்ணிக்கை கிடுகிடு என துளங்கியும் விட்டது, மொத்தமும் ஆன்லைன் வாக்குப் பதிவு முறை என்பதால் இன்றோ அல்லது நாளையே வெற்றி பெற்றது யார் என்பது தெரிந்து விடும்.
கலிஃபோர்னியா அதிகபட்சமாக 54 எலக்டோரல் காலேஜ் வாக்குகளைக் (Electoral) கொண்டுள்ளது. அலாஸ்கா மாகாணம் 3 எலக்டோரல் காலேஜ் வாக்குகளையே கொண்டுள்ளது.
இந்த தேர்தலில் கலிஃபோர்னியாவும் அலாஸ்காவும் ஒரே விதமான செல்வாக்கை கொண்டிருக்கவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.
முடிவை நிர்ணயிக்கும் மாகாணங்கள்
அதிபர் யார் என்பதை தீர்மானிக்கும் மாகாணங்கள் என்று அழைக்கப்படும் ‘Swing States’, அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகவும் முக்கியமானவை. இந்த மாகாணங்களில் உள்ள வாக்காளர்கள் யாரைத் தேர்வு செய்வார்கள் என்று யூகிக்க இயலாது. எனவே தேர்தல் முடிவுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடிய மாகாணங்களாக இவை திகழ இயலும்.
இந்தத் தேர்தலில் முடிவைத் தீர்மானிக்கும் ஆறு மாகாணங்கள் விஸ்கான்சின், நெவேடா, மிச்சிகன், வடக்கு கரோலினா, அரிஸோனா மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாகாணங்கள் ஆகும்.
அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் மொத்தமாக 538 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பெரும்பான்மை எண்ணிக்கையான 270 அல்லது அதற்கு மேற்பட்ட எலக்டோரல் காலேஜ் வாக்குகளை பெற வேண்டும்.
கடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் 306 எலக்டோரல் காலேஜ் வாக்குகளைப் பெற்றார். குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்புக்கு 232 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் கிடைத்தன.
சமீபமாய் சர்வதேச ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்புச் செய்திகள்:
இந்தியாவின் பார்வையில் யார் சிறந்த வேட்பாளர்? இந்தியருக்கு இந்த தேர்தல் முடிவுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கு இந்தத் தேர்தல் எத்தகைய தாக்கத்தை தரும்?
மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர் இந்த தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்தியாவின் கண்ணோட்டத்தில், அமெரிக்கா இந்தியாவை எவ்வாறு அணுகுகிறது என்பதைப் பொருத்தே பல்வேறு விசயங்கள் நடைபெறுகின்றன.
சர்வதேச நிறுவனங்கள் முறையாக செயல்பட அதிகமாக நன்கொடை வழங்கும் நாடாக உள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் எந்த விதமான முடிவுகள் எட்டப்பட்டாலும் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அரசியலில் அது பாதிப்பை ஏற்படுத்தும்.
வர்த்தகமாக இருக்கட்டும், தூதரக ரீதியிலான விவகாரமாகட்டும், சுற்றுச்சூழல் பிரச்னைகள், காலநிலை மாற்றம், பயங்கரவாதம் என எதுவாக இருந்தாலும் அதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
சமீபத்திய காலங்களில் அமெரிக்காவின் அதிபராக யார் இருந்தாலும் இந்தியாவுடனான உறவு ஸ்திரத்தன்மையுடன் இருப்பதை காண்கின்றோம்.
டொனால்ட் டிரம்பின் ஆட்சி காலத்திலும் தற்போதைய ஜோ பைடனின் ஆட்சி காலத்திலும் நம்இரு நாட்டு உறவும் வலுவாகவே உள்ளது.
அமெரிக்கா முன்பு போல் தற்போது பலமாக இல்லை. ஆனாலும் அமெரிக்காவின் ஆதிக்கம் சர்வதேச நிறுவனங்களில் இன்னும் இருக்கிறது.
இந்தியா போன்ற பெரிய நாடுகளின் கருத்துகள் முறையாக கேட்கப்படுவதற்கும் முறையான பிரதிநிதித்துவம் கிடைக்கவும் ஐ.நாவில் மாற்றங்களைக் கொண்டுவர இந்தியா பல காலமாக முயற்சி செய்து வருகிறது. ஆனால் அமெரிக்கா இதற்கு தயாரானால் மட்டுமே இது சாத்தியம் என்பதே உண்மை.
சீனாவுக்கு சாதகமாக இருக்கும் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுப்பிய போது, யார் அமெரிக்காவின் அடுத்த அதிபராக வந்தாலும் சீனா மீதான அமெரிக்காவின் கொள்கைகளில் பெரிய மாற்றம் வர வாய்ப்புகள் இல்லை.
அது போன்றே இந்தியாவின் வளர்ச்சிகள் மற்றும் அரும்பி வரும் வாய்புகள் யார் ஆட்சிக்கு வந்தாலும் அமெரிக்காவின் கொள்கைகளில் நமக்கு பாதகமாக இருக்காது என நம்புவோம்.