செய்திகள்

இந்தியன் வங்கி தெற்கு மண்டல கிளை மேலாளர்கள் ஆலோசனை, கருத்துக் கேட்புக் கூட்டம்

Spread the love

சென்னை, ஆக.20

மத்திய அரசின் நிதிசார் துறையின் ஆலோசனைப்படி நாட்டின் பொருளாதாரத்தை 2024–2025ம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக அடைவதற்கான பரிந்துரைகளை பெற கிளை மேலாளர்களிடம் ஆலோசனைகள் பெற கூட்டம் நடத்த வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் இவ்வங்கியின் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வங்கியின் தெற்கு மண்டலம் சார்பில் கிளை மேலாளர்களின் கருத்து கேட்பு, ஆலோசனைக் கூட்டம் மண்டல அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வங்கியின் செயல் இயக்குனர் எம்.கே. பட்டாச்சார்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிளை மேலாளர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகள் மற்றும் கடன் வழங்குவதற்கான ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக விவசாய கடன்கள், வருமானம் இரட்டிப்பு ஆக்குவதற்கான வழிமுறைகள், சிறு, குறுந்தொழில் கடன்கள், மகளிர் முன்னேற்றம், பணமில்லா பரிவர்த்தனை மற்றும் மின்னணு வங்கி சேவைகள் அனைவருக்கும் வங்கி சேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் வங்கியின் தெற்கு மண்டல மேலாளர் பி.சுப்பிரமணியன், துணை மண்டல மேலாளர் ஆர்.ராஜசேகர், உதவி பொது மேலாளர்கள், கிளை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *