வர்த்தகம்

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி 4 கிளைகள் இணைப்பு: 70 வயதுக்கு மேற்பட்ட முதியவருக்கு வீடு தேடி வந்து சேவை

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி 4 கிளைகள் இணைப்பு:

70 வயதுக்கு மேற்பட்ட முதியவருக்கு வீடு தேடி வந்து சேவை

செயல் இயக்குனர் எம்.கே. பட்டாச்சார்யா தகவல்

சென்னை, செப்.15-

இந்தியன் வங்கி எக்சிகியூடிவ் டைரக்டர் எம்.கே. பட்டாச்சார்யா விழாவில் பேசுகையில், இந்தியன் வங்கி இதுவரை 4 அலகாபாத் வங்கி கிளைகள் இந்தியன் வங்கி கிளைகளுடன் 6 கிளைகளை ஒருங்கிணைத்துள்ளது. விரைவில் 300 கிளைகள் இணைக்கப்படும். இதன் மூலம் செலவு குறையும். 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு வீடு தேடி வந்து சேவை செய்ய உள்ளது என்றும் எம். கே. பட்டாச்சார்யா தெரிவித்தார்.

வாடிக்கையாளருக்கு குறைந்த கட்டணத்தில் பல்வேறு வங்கி சேவை வழங்கப்படும். இந்தியன் வங்கி நாட்டின் மிகப்பெரிய 7வது வங்கியாக நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் மயமாகி எங்கிருந்தும், எப்போதும் வங்கி பரிவர்த்தனை வசதியை வழங்கியுள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக அண்ணா சாலை இந்தியன் வங்கி கிளையோடு, மவுண்ட் ரோடு அலகாபாத் வங்கி கிளை இணைக்கப்பட்டுள்ளது. இதேபோல டாக்டர் அழகப்பா சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையோடு அலகாபாத் புரசைவாக்கம் கிளையும், நொளம்பூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையோடு, அதே பகுதியில் உள்ள அலகாபாத் வங்கி கிளையும் இணைக்கப்பட்டுள்ளது.இந்த 3 இந்தியன் வங்கிகளையும் அதன் செயல் இயக்குனர் எம்.கே.பட்டாச்சார்யா திறந்து வைத்தார்.

இதேபோல திருவள்ளூரில் உள்ள இந்தியன் வங்கியோடு, அதே பகுதியில் உள்ள அலகாபாத் வங்கி கிளை இணைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் கள பொதுமேலாளர் கே.சந்திர ரெட்டி, சென்னை வடக்கு மண்டல மேலாளர் எம்.ஆறுமுகம், பூந்தமல்லி மண்டல மேலாளர் எம்.வெங்கடேசன், சென்னை தெற்கு மண்டல மேலாளர் ஏ.பழனி உள்பட வங்கியின் மூத்த அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *