வாழ்வியல்

இந்தியக் கடலில் மீன்கள் அதிக அளவுக்கு செத்து மடிவது பற்றி தீவிர ஆராய்ச்சி

இந்தியக் கடலைப் பொறுத்தவரை கடல் நூல் அறிவும் கடல் வளமும் வருமானமும் பல வழிகளிலும் பெருகும் என்பதில் ஐயமில்லை.

இந்தியக் கடலை ஆராய்வதால் பெறும் அறிவை, பசிபிக், அட்லாண்டிக் கடல்கள் முதலிய மற்ற கடல்களை ஆராய்வதற்கும் பயன்படுத்தலாம்.

பல சிக்கல்களுக்குத் தீர்வுகள் காணலாம் இந்தியக் கடலில் மீன்கள் அதிக அளவுக்கு மடிகின்றன. உயிர் நூல் விஞ்ஞானிகளுக்கு இது பெரும் புதிராகவே உள்ளது. அவ்வாறு இறத்தல் அதிகமாக மீன்கள் உண்டாவதா அல்லது வேறு காரணங் குறித்தா என்று அறியலாம்.

இந்தியக் கடலின் நீரோட்டங்கள் பசிபிக், அட்லாண்டிக் கடல்களில் உள்ளது போன்று. அவ்வளவு வலுவுள்ளவை அல்ல. அவை பசிபிக், அட்லாண்டிக் கடல்களின் நீரோட்டங்களிலிருந்து வலுவிலும் விரைவிலும் அதிகமாக வேறுபடுகின்றன.

இந்தியக் கடலின் மேற்பரப்பு கிழக்காகச் சாய்ந்துள்ளது. அதன் மேற்பரப்புச் சாய்விற்கும் அதில் வலுவான புதை நீர் ஓட்டங்கள் இல்லாததற்கும் தொடர்பு இருக்கலாம்.

மேற்கூறிய இரு உண்மைகளும் தற்காலிகமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் செய்யப்படும் ஆராய்ச்சிகளால் அவை உறுதி செய்யப்படும். இந்தியக் கடலில் மீன்கள் அதிக அளவுக்கு செத்து மடிவது பற்றி தீவிர ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *