சினிமா

‘இது தான் காதலா?’ அறிமுக இயக்குனர் ராஜசிம்மா கதையிலும் ஒரு ‘ரோபோ’

‘இது தான் காதலா?’ படத்தில் மனிதனை ரோபோவாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராஜசிம்மா. ‘பயோ சிப் டெக்னாலஜி’ உத்தியை இதற்குப் பயன்படுத்தி இருக்கிறார்.

காதல் என்பதை காலம் தான் நிர்ணயிக்கும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார். காதலையும் கம்ப்யூட்டரையும் இணைத்து திரைக்கடை அமைத்து இயக்கியிருக்கிறார்.

கதையின் நாயகனாக சரண், நாயகியாக அஸ்மிதா, 2வது நாயகியாக ஆயிஷா, மனித ரோபோவாக இயக்குனர் ராஜசிம்மா, நடிகை ஜெனிபர் முக்கிய கதாபாத்திரத்தில். இயக்குனர் பாலுஆனந்த், பயில்வான் ரங்கநாதன், காதல் சுகுமார், கூல் சுரேஷ், சின்ராஜ், திருப்பூர் தெனாலி, தென்னவராயன், பாலாம்பிகா நடித்திருக்கிறார்கள்.

நடனத்தை நிஷாவும், பாடல்களை கவிஞர்கள் வானம் யாமினி குணசேகரன், மெளனன், ராஜசிம்மா ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். தேசிய விருது பெற்ற சங்கர் ரங்கராஜ் இசையமைத்திருக்கிறார். எடிட்டிங் எஸ்.எம்.வி. சுப்பு, ஒளிப்பதிவு கணேஷ் ராஜா, சண்டை ரத்னம். குறிஞ்சி பிலிம்ஸ் சார்பில் வி.எம்.முருகன் தயாரித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *