வாழ்வியல்

இதய நோய் வராமல் தடுக்கும் செம்பருத்திப் பூ

செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமுடி கறுப்பாகவும் நீண்டும் வளர காலங் காலமாக செம்பருத்தி இலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன.

செம்பருத்தி பூ இதய நோய் வராமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ; காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை வேளைகளில் குடித்து வர இதய பலவீனம் தீரும்.

செம்பருத்தி பூத்தூளுடன் சம எடை அளவு மருதம் பட்டைத் தூள் கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை நோய் குறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *