செய்திகள்

இதய கனத்தோடு வழியனுப்புவோம் : ஸ்ரீகாந்த் மறைவுக்கு கமல் இரங்கல்

சென்னை, அக். 13–

‘இதய கனத்தோடு வழியனுப்பி வைப்போம்’ என்று, பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டை சேர்ந்த நடிகர் ஸ்ரீகாந்த் 1965ஆம் ஆண்டு ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழடைந்தார். இதையடுத்து பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து அசத்திய ஸ்ரீகாந்த், வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 82. நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல் இரங்கல்

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், “கதாநாயகன், வில்லன், குணச்சித்திரப் பாத்திரங்கள் என ஆல்ரவுண்ட் நடிப்புக் கலைஞராகத் திகழ்ந்த ஸ்ரீகாந்த், தீவிரமான இலக்கிய வாசகராகவும் ஜெயகாந்தனின் ஆப்த சிநேகிதராகவும் இருந்தார். இன்று தன் இயக்கங்களை நிறுத்திக்கொண்டார். இதய கனத்தோடு வழியனுப்பிவைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *