வாழ்வியல்

இதயம், உடலுக்கு நன்மை செய்யும் உணவு வகைகள்–1

தேங்காய் எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய்யைத் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேங்காய் எண்ணெய் 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. தேங்காயில் உள்ள கொழுப்பு அமிலம் (Fatty acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. தினமும் 2 முதல் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வது இதயத்திற்கு மிகவும் நல்லது.

• காபி :

காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி குடிக்காவிட்டால் பலருக்கு அன்றைய பொழுதே தொடங்காது. காபியில் உள்ள ‘கேஃபஸ்டால்’ (Cafestol), கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ‘அல்சர்’ மற்றும் ‘இதய நோய்’ உள்ளவர்கள், காபி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது. அதேசமயம், காபி சில நோய்களுக்குத் தடுப்பு மருந்தாகவும் இருக்கிறது என்பது உண்மை. இதில் உள்ள சில வேதிப்பொருட்கள் ‘பார்கின்சன்’ நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. இன்சுலின் சுரக்கச் செய்வதால், காபி குடிப்பவர்களுக்கு இரண்டாம் வகை டயாபடீஸ் வராமல் தடுக்கலாம்.

• ஆரஞ்சு ஜூஸ் :

ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி சத்து மட்டுமின்றி, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற பல சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆரஞ்சுப் பழம் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். ஆரஞ்சுப் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்தானது அதிகம் நிறைந்திருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைக்கும். மேலும் உடலில் எப்போது பொட்டாசியம் சத்துக் குறைகிறதோ அப்போது தான் இதயத்தில் பிரச்சனை ஏற்பட ஆரம்பிக்கிறது. எனவே, தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவது நல்லது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டால், வலுவான பற்களைப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *