செய்திகள்

இண்டிகோ விமானங்களில் வசூலிக்கப்பட்ட எரிபொருள் கட்டணம் இன்று முதல் ரத்து

டெல்லி, ஜன. 04–

இண்டிகோ விமானங்களில் பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை ரத்து செய்வதாகவும், அது உடனடியாக அமலுக்குக்கு வருவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் பயணிகளின் கட்டணத்துடன் எரிபொருள் கட்டணத்தை கூடுதலாக அறிமுகம் செய்தது. அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300 என்றும் 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ. 1,000 என எரிபொருள் கட்டணமாக விதிக்கப்பட்டு வந்தது.

உடனடியாக அமல்

இந்த நிலையில், விமான எரிபொருள் விலையை ஒன்றிய அரசு குறைந்ததை தொடர்ந்து, பயணிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த எரிபொருள் கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகளில் இந்த எரிபொருள் கட்டண ரத்து நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *