மத்திய அரசு தகவல்
புதுடெல்லி, ஜூலை 25-
கடந்த 5 ஆண்டுகளில் இடஒதுக்கீடு பிரிவில் 1,195 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.எப்.எஸ்., ஆகியவற்றுக்கான ஆட்சேர்ப்பு சம்பந்தப்பட்ட விதிகளின்படி மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் (யுபிஎஸ்சி) மூலம் செய்யப்படுகிறது.
தற்போதுள்ள அறிவுறுத்தல்களின்படி இந்த பணிகளில் எஸ் சி, எஸ் டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு முறையே 15 சதவீதம், 7.5 சதவீதம் மற்றும் 27 சதவீதம் என்ற விகிதத்தில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளில் இடஒதுக்கீடு பிரிவில் 1,195 பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.