வாழ்வியல்

இஞ்சி உணவில் சேர்த்துக் கொண்டால் குடலில் சேரும் கிருமிகளை அழித்து கல்லீரலை சுத்தப்படுத்தும்

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.

நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது.

இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும் சக்தி இஞ்சிக்கு இருக்கிறது. இஞ்சி கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.

மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும்.

ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும். தொண்டை வலி ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு அருமருந்தாகும்.

நிறைய மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல், பொரியலில் சேர்த்துப் பயன் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *