செய்திகள்

இசையுடன் அரபு மொழியில் திருக்குறள் ஒலிப்பதிவு: எடப்பாடி வெளியிட்டார்

37 மாவட்டங்களுக்கு தமிழ்ச் செம்மல் விருது

இசையுடன் அரபு மொழியில் திருக்குறள் ஒலிப்பதிவு:

எடப்பாடி வெளியிட்டார்

ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி பெற்றுக் கொண்டார்

சென்னை, பிப்.1–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (1–ந்தேதி) தலைமைச் செயலகத்தில் 37 மாவட்டங்களுக்கு தமிழ்ச் செம்மல் விருதுகளை வழங்கினார். ‘திருக்குறள் அரபு – இசைக்குறள் தகடு’–ஐ முதலமைச்சர் வெளியிட்டார்.

2020ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் என்ற வகையில் சென்னை மாவட்டத்திற்கு ஜெ.வா. கருப்புசாமி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு வேணு புருஷோத்தமன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு சு. சதாசிவம், வேலூர் மாவட்டத்திற்கு மருத்துவர் சே. அக்பர் கவுஸர், கிருட்டினகிரி மாவட்டத்திற்கு மா. முருககுமரன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இரா. வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டத்திற்கு பரிக்கல் ந. சந்திரன், கடலூர் மாவட்டத்திற்கு முனைவர் ஜா. இராஜா, பெரம்பலூர் மாவட்டத்திற்கு முனைவர் அ. செந்தில்குமார் (எ) தமிழ்க்குமரன், அரியலூர் மாவட்டத்திற்கு முனைவர் சா. சிற்றரசு, சேலம் மாவட்டத்திற்கு கவிஞர் பொன்.சந்திரன், தருமபுரி மாவட்டத்திற்கு பாவலர் பெரு.முல்லையரசு, ஈரோடு மாவட்டத்திற்கு முனைவர் கா. செங்கோட்டையன்,

கரூர் மாவட்டத்திற்கு சி. கார்த்திகா, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு எம்.ஜி. அன்வர் பாட்சா, திருப்பூர் மாவட்டத்திற்கு துரை அங்குசாமி, நீலகிரி மாவட்டத்திற்கு ம. பிரபு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு சோமவீரப்பன், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜீவி (ஜீ. வெங்கட்ராமன்), சிவகங்கை மாவட்டத்திற்கு இரா. சேதுராமன், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பழ.மாறவர்மன், திருவாரூர் மாவட்டத்திற்கு இராம. வேல்முருகன், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மா. கோபால்சாமி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆ. முனியராஜ், மதுரை மாவட்டத்திற்கு முனைவர் போ. சத்தியமூர்த்தி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு தா. தியாகராசன், தேனி மாவட்டத்திற்கு த. கருணைச்சாமி, விருதுநகர் மாவட்டத்திற்கு கவிஞர் சுரா (எ) சு. ராமச்சந்திரன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு வீ. செந்தில் நாயகம், தூத்துக்குடி மாவட்டத்திற்கு ச. காமராசு (முத்தாலங்குறிச்சி காமராசு), கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பா. இலாசர் (முளங்குழி பா. இலாசர்), திருப்பத்தூர் மாவட்டத்திற்கு முனைவர் ச. சரவணன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நந்திவரம் பா. சம்பத் குமார், இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கவிஞர் பனப்பாக்கம் கே. சுகுமார் , தென்காசி மாவட்டத்திற்கு மு. நாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு சி. உதியன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு துரை குணசேகரன் ஆகியோருக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கியதோடு, விருதாளர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, தகுதியுரை, பொன்னாடை ஆகியவற்றையும் வழங்கிச் சிறப்பித்தார்.

திருக்குறள் அரபு – இசைக்குறள் தகடு

2020 – 2021ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட திருக்குறள் அரபு மொழிபெயர்ப்பு நூல் உலக அளவில் மாபெரும் அங்கீகாரத்தையும், தமிழின் பெருமையை உயர்த்துவதாகவும் அமைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு ‘‘திருக்குறள் அரபுமொழியில் இசையுடன் ஒலிப்பதிவு செய்து வெளியிடப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பிற்கிணங்க, 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை பேராசிரியர் முனைவர் ஜாகீர் உசேன் திருக்குறள் அரபு மொழியில் இசையுடன் ஒலிப்பதிவு செய்து தயாரிக்கப்பட்ட ‘திருக்குறள் அரபு – இசைக்குறள் தகடு’ முதலமைச்சர் வெளியிட, ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி பெற்றுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *