செய்திகள்

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை, செப். 19–

நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிறந்தவர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளரான இவர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என்ற பன்முகங்களை பெற்றுள்ளார்.

சென்னை, காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இவர் காளி, நான், சைத்தான், பிச்சைக்காரன் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு பாத்திமாவை திருமணம் செய்து கொண்ட விஜய் ஆண்டனிக்கு மீரா மற்றும் லாரா ஆகிய மகள்கள் பிறந்தன.

மூத்த மகள் மீரா சர்ச் பார்க் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். மீரா , சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்றிரவு மீரா வழக்கம் போல் அவரது அறைக்கு உறங்கச் சென்றார்.

விஜய் ஆண்டனி அதிகாலை மீரா அறைக்கு சென்ற போது அவர் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டில் உள்ளவர்கள் துணையோது அவளை மீட்டு காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்த மயிலாப்பூர் போலீஸார் மருத்துவமனைக்கு விரைந்து வந்து மீரா சடலத்தைப்பெற்று, உடல் கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். முதல்கட்ட விசாரணையில் மீரா மன அழுத்தத்தில் இருந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர், மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

விஜய் ஆண்டனி மகள் மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்த ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏராளமான நடிகர், நடிகைகள் விஜய் ஆண்டனி வீட்டிற்கு சென்று அவரது மகள் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் டிடிகே சாலையில் உள்ள விஜய் அண்டனி வீட்டிற்கு சென்று மீரா உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறினார்.

தந்தையும் தற்கொலை

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்டுள்ள இந்த நேரத்தில் தனது தந்தை குறித்து விஜய் ஆண்டனி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதில், தனது தந்தை தனக்கு 7 வயது இருக்கும் போது தற்கொலை செய்துகொண்டார். வாங்காத கடனுக்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் விஜய் ஆண்டனி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *