திரைப்படம் எப்படி இருக்கு?
வாழை திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் இப்படத்தை விநியோகம் செய்துள்ளது. இப்படம் இயக்குனர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான திரைப்படமாகும்.
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தில், கலையரசன், நிகிலா விமல், ஜே சதிஷ் குமார், திவ்யா துரைசாமி, ஜானகி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்
மாரி செல்வராஜின் வாழை: கண்கலங்கிய இயக்குநர் பாலா
படம் வெளியாவதற்கு முன்பே சிறப்பு காட்சி மூலம் படம் பார்த்த இயக்குநர் மணிரத்னம், பாரதிராஜா உள்ளிட்டோர், வாழை திரைப்படம் மாரி செல்வராஜுக்கு நிச்சயம் பல விருதுகளை பெற்றுத்தரும் என்றனர். மேலும் படத்தை பார்த்த இயக்குநர் பாலா, கண்கலங்கியபடி வந்து, மாரி செல்வராஜுக்கு முத்தம் கொடுத்து, சில நிமிடங்கள் மாரியின் கைகளை பற்றியபடி பேச முடியாத நிலையில் இருந்தார்.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தனது எக்ஸ் தளபக்கத்தில், மாரி செல்வராஜ், உன் வாழ்க்கையின் நல்ல பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு உன் படைப்புகளை பார்க்கத் தொடங்கினேன். பிரமிப்பாக இருந்தது. இப்போது, #Vaazhai -ல் உன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும் பார்த்தபிறகு, உன்மீதான மரியாதை ஆயிரம் மடங்காய் அதிகரித்திருக்கிறது. இனி, உன் படைப்புகள் மீதான மரியாதையும் அவ்வாறே கூடும். வாழையடி வாழையாய் உன் தலைமுறையே சிறக்கும். சிறப்புக் காட்சிக்கு அழைத்தாய், திரை பார்த்து மெய் சிலிர்த்தேன் …